14 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 14) அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கி திரண்டனர்.
சமீபத்தில் ரூ.2.37 கோடி மதிப்பில் கோயிலில் திருப்பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜூலை 10ம் தேதியிலிருந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலை 7ம் கால பூஜை நடைபெற்ற பின்னர், இரவில் மூலவர்களுக்கு காப்பு கட்டும் சடங்கும் நடந்தது.
இன்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பின்னர் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசம், மற்றும் அதிகாலை 3.45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று முடிந்தது.
அதன்பின், 4.30 மணியளவில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரப்பிய தங்க மற்றும் வெள்ளிக் குடங்கள், ...









