இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 8 முக்கிய அம்சங்கள்
15 மாதமாக நீடித்த இஸ்ரேல் ஹமாஸ் போர்.. திடீரென முடிவுக்கு வந்தது எப்படி! 8 மேஜர் பாயிண்டுகள்
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களாகப் போர் தொடர்ந்து வந்த சூழலில், இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் முடிவே இல்லாமல் தொடர்ந்து வந்தது. இதை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இருப்பினும், பல காரணங்களால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் ஒருவழியாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
3 கட்டங்களாகப் போர் நிறுத்தம்:எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ததில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாம் கட்டத்தில் தாக்குதல் முழுமையாக ந...