6G தொழில்நுட்பம்: உலகளாவிய முன்னெடுப்பில் 24 நாடுகளுடன் இந்தியா இணைகிறது!
அடுத்த தலைமுறை 6G நெட்வொர்க்குகளின் (வலைப்பின்னல்களின்) வளர்ச்சியை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச முன்னெடுப்பில், அமெரிக்கா மற்றும் பிற 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.
அடுத்த தலைமுறை நெட்வொர்க்குகள் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களைப் பிரதிபலிப்பதையும், போட்டித்தன்மையை வலுப்படுத்துவதையும், மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதையும் உறுதி செய்வதற்கான முயற்சியில் இந்தியாவும் அமெரிக்கா மற்றும் பிற 24 நாடுகளுடன் இணைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
G20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தின் (G20 Innovation Ministerial) ஒரு பகுதியாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக்கைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. 6G தொழில்நுட்பத்தின் எதிர்காலம் மற்றும் அ...









