
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.72,040
கடந்த சில நாட்களாக நிலவும் மாறுபாடுகளுக்கு பிறகு, இன்று (ஏப்ரல் 24) சென்னை மார்க்கெட்டில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.72,040 ஆக விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து, ரூ.9,005 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் ஏப்ரல் 22ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.74,320-ஆகவும், ஒரு கிராமுக்கு ரூ.9,290-ஆகவும் இருந்தது. ஆனால் ஏப்ரல் 23ஆம் தேதி தங்க விலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 வீழ்ச்சி ஏற்பட்டு, விலை ரூ.72,120 ஆக குறைந்தது. இதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.275 குறைந்து, ரூ.9,015 ஆக விற்பனை செய்யப்பட்டது.
அதாவது, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் ரூ.2,280 சரிந்துள்ளது. இது தற்போதைய சந்தை நிலவரத்தில் ஒரு முக்கிய மாற்றமாகும். தங்கம் விலையைக் கவனித்து வரும் நகைப்பிரிய...