தமிழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு: கவர்னர் ஆர்.என் அறிவிப்பு!
தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, வரும் ஏப்ரல் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக கவர்னர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டில், இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் தொடர்பாக மாநில அரசு மற்றும் கவர்னர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டது. இந்த வழக்கில், முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அதில், துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில முதல்வரிடம் தான் உள்ளது என்றும், சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த தீர்ப்பு தமிழக அரசுக்குத் தோல்வியல்ல என்றும், அரசின் சட்ட செயல்பாடுகளுக்கு ஆதரவாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இ...









