
இறுதி கட்ட சோதனையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய மருந்து.
மனித பரிசோதனையின் இறுதி கட்டத்திற்குள் ஒரு புதிய உயிர்காக்கும் ஆண்டிபயாடிக் நுழைந்துள்ளது. "ஜோசுராபால்பின்", என்றழைக்கப்படும் இந்த மருந்து மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றக்கூடும். நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இந்த சோதனையை முன்னோக்கி எடுத்துச் செல்வதாக சுவிஸ் மருந்து தயாரிப்பாளர் ரோச் கூறினார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அசினெடோபாக்டர் பாக்டீரியாவை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றன. மேலும் அதற்கு எதிர்வினையாற்றும் எந்தவொரு ஆண்டிபயாடிக் மருந்தும் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த "ஜோசுராபால்பின்" சோதனை மருந்து இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அங்கீகரிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த மருந்தின் இறுதி கட்ட சோதனை உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 400 நோயாளிகளுடன் ஒரு ஆய்வாக இருக்கும். "பொது...