Friday, June 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இறுதி கட்ட சோதனையில், ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய மருந்து.

மனித பரிசோதனையின் இறுதி கட்டத்திற்குள் ஒரு புதிய உயிர்காக்கும் ஆண்டிபயாடிக் நுழைந்துள்ளது. “ஜோசுராபால்பின்“, என்றழைக்கப்படும் இந்த மருந்து மில்லியன் கணக்கானவர்களைக் காப்பாற்றக்கூடும். நிமோனியா மற்றும் செப்சிஸ் போன்ற கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இந்த சோதனையை முன்னோக்கி எடுத்துச் செல்வதாக சுவிஸ் மருந்து தயாரிப்பாளர் ரோச் கூறினார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) அசினெடோபாக்டர் பாக்டீரியாவை ஒரு அச்சுறுத்தலாக பார்க்கின்றன. மேலும் அதற்கு எதிர்வினையாற்றும் எந்தவொரு ஆண்டிபயாடிக் மருந்தும் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த “ஜோசுராபால்பின்” சோதனை மருந்து இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அங்கீகரிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த மருந்தின் இறுதி கட்ட சோதனை உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 400 நோயாளிகளுடன் ஒரு ஆய்வாக இருக்கும். “பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய தொற்று நோய் சவால்களில் ஒன்றான நுண்ணுயிர் எதிர்ப்பை சமாளிக்க புதிய கண்டுபிடிப்புகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள்” என்று ரோச்சின் தொற்று நோய்களுக்கான உலகளாவிய தலைவர் மைக்கேல் லோப்ரிட்ஸ் தி இன்டிபென்டன்ட் கூறினார்.

ரோச்சின் ஒரு பிரிவின் மூத்த துணைத் தலைவரும், நோயெதிர்ப்புத் துறையின் உலகளாவிய தலைவருமான லாரி சாய், மருந்து எதிர்ப்பு பாக்டீரியாக்கள் “உலகின் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளன” என்றார். செய்தி நிறுவங்களிடம் பேசிய அவர், “இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புதுமையான உயிரியல், பாக்டீரியா சவ்வுகளின் அமைப்பு பற்றிய புதிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தக்கூடும், இது எதிர்காலத்தில் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்” என்றும் கூறினார்.

செப்சிஸ் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 11 மில்லியன் பேர் இறக்கின்றனர், அதாவது இது ஒவ்வொரு 2.8 வினாடிக்கும் ஒருவரைக் கொல்கிறது. மேலும் சமூகத்தால் பெறப்பட்ட நிமோனியா (CAP) ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது மூன்று முதல் நான்கு மில்லியன் மக்களைக் கொல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.