Monday, July 27பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இந்திய கடற்படைக் கப்பல் சுதர்ஷினி அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து புறப்பட்டது!

இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ஐ.என்.எஸ். சுதர்ஷினி, நடைபெற்று வரும் லோகாயன் 26 திட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 25 அன்று அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து புறப்பட்டது. அங்கு தங்கியிருந்த காலத்தில், இக்கப்பல் மதிப்புமிக்க SAIL 250 கொண்டாட்டங்கள் மற்றும் சர்வதேச கடற்படை அணிவகுப்பு 250 ஆகியவற்றில் இந்தியாவைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியதுடன், தொழில்முறை மற்றும் கலாச்சார ஈடுபாடுகள் மூலம் கடல்சார் கூட்டாண்மைகளையும் வலுப்படுத்தியது.

இக்கப்பல் நார்ஃபோக், பால்டிமோர், நியூயார்க் மற்றும் பாஸ்டன் ஆகிய இடங்களில் நடைபெற்ற SAIL 250 நிகழ்வுகளில் பங்கேற்றதுடன், முக்கிய பிரமுகர்கள், இந்தியப் புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச கடற்படைக் குழுக்களை வரவேற்று, கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.

ஐ.என்.எஸ். சுதர்ஷினி தற்போது அசோரஸில் (போர்ச்சுகல்) உள்ள பொன்டா டெல்கடாவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இக்கப்பல், உலக அரங்கில் இந்தியாவின் கடல்சார் வலிமை, தொழில்முறைத் திறன் மற்றும் நல்லெண்ணத்தின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து விளங்குகிறது.