Thursday, May 22பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தங்கம் விலையில் ரூ.920 சரிவு! வெள்ளி நிலையான விலையில் உள்ளது!

தமிழகத்தில் நேற்றைய முன்தினம், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,130, சவரனுக்கு ரூ.73,040 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.110 ஆக இருந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.115 குறைந்து, ரூ.9,015 ஆகவும், சவரனுக்கு ரூ.920 குறைந்து, ரூ.72,120 ஆகவும் விற்பனையானது.வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை; அது முன்னிருந்தபடி ஒரு கிராம் ரூ.110 என நீடிக்கிறது.