தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது: மே 27, 2025 அன்று, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் (ஒரிசா கடலோரம் அருகே) காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது 48 மணி நேரத்துக்குள் மேலும் வலுப்பெறும் எனவும், தென்னிந்தியாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் பரவலான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ரெட் அலெர்ட்: இடி, மின்னலுடன் கனமழை
மே 27 (திங்கள்):
தமிழகத்தின் சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தரைக்காற்று வேகம் மணிக்கு 40–50 கிமீ வரை வீச வாய்ப்பு.
நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை.
தேனி, தென்காசி, திருநெல்வேலி மலைப்பகுதிகளில் மிக கனமழை ஏற்படக்கூடும்.
திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய...









