கிட்னி விற்பனை விவகாரம் – ஐஜி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக, தனி விசாரணைக்குழுவை அமைக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, விசாரணையை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன் செயல்பாடுகள் நேரடியாக நீதிமன்ற கண்காணிப்பில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பொதுநல மனுவில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள்:பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பில் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் சில அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதால், மாநில போலீசாரால் நேர்மையான விசாரணை நடத்த இயலாது. எனவே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, விசாரணை நடத்த வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
நீதிபதிகளின் கேள்வி – அரசின் பதில்:இந்த மனு, நீத...








