ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமல்!
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிமுறைகள் இன்று, மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன் படி, ஏ.டி.எம். பரிவர்த்தனை கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் கவனமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ நகரங்களில்: ஒரே மாதத்தில் 5 இலவச பரிவர்த்தனைகள் வரை மட்டும் கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். மெட்ரோ அல்லாத நகரங்களில்: மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள். இதைத் தாண்டும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 கட்டணம் வசூலிக்கப்படும்.
ரொக்கம் அல்லாத பரிவர்த்தனைகள் (உதா: பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட்) ஆகியவற்றுக்கும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன் ரூ.6 இருந்த கட்டணம் தற்போது ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வங்கிகள் இடையேயான ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான செலவினங்களைச் சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் ரிசர்வ் வ...









