எரிபொருள் பற்றாக்குறை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – இந்தியன் ஆயில் விளக்கம்
பாகிஸ்தானுடன் தொடரும் போர் பதற்ற சூழ்நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. எரிபொருட்களுக்கு குறைபாடு ஏற்படும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. இதனால், பல பகுதிகளில் பொதுமக்கள் பேனிக் முறையில் எரிபொருள் வாங்க குவிந்ததால் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியன் ஆயில் கழகம் (Indian Oil Corporation – IOC) ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டு, நாட்டின் எரிபொருள் நிலைமை குறித்து மக்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் வெளியிட்டுள்ள விளக்கம்: "நாடு முழுவதும் எங்களிடம் போதிய அளவு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பு உள்ளது. எங்கள் விநியோகங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை; எரிபொருள் சேகரிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்."
சமீபத்திய ...









