போலி குவான்டம் ஏ.ஐ. வீடியோவை நம்பி, முதலீடு செய்யாதீர்கள் – சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை
சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒரு வீடியோவில், "குவான்டம் ஏ.ஐ." என்ற தொழில்நுட்பத்தில் மூலதனமாக ₹21,000 முதலீடு செய்தாலே, வாரத்திற்கு ₹4.55 லட்சம் லாபம் கிடைக்கும் என பரப்பப்படுகிறது. இதற்காக அதிக படிப்பு தேவை இல்லை என்றும், இந்தியர்கள் ஏற்கனவே பெரிதளவில் இதில் ஈடுபடத் தொடங்கி விட்டனர் என்றும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவது போல் பொய்யாக வடிவமைக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மேலும், இது முன்பெல்லாம் சிலருக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு என்றும், தற்போது அரசு தளர்வுகள் வழங்கியிருப்பதால் யாரும் இதில் சேரலாம் எனவும் அதில் வலியுறுத்தப்படுகிறது. மேலும், "இம்மாதம் வரை மட்டுமே இந்த வாய்ப்பு இருக்கும்; இப்போது 'லிங்க்' கிளிக் செய்து முதலீடு செய்யுங்கள்" எனவும் அந்த வீடியோ ஊக்குவிக்கிறது.
இந்த வீடியோவில் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் பொய...









