துருக்கி, கிரீஸ் மற்றும் சிரியாவிலும் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
துருக்கியின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று (ஜூன் 3) ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மர்மாரிஸ் என்ற கடலோர நகரத்தில் மையமாகக் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்துக்கான மையம் மத்திய தரைக்கடலிலேயே இருந்ததால், அதற்கான அதிர்வுகள் கிரீஸின் ரோட்ஸ் தீவுகள் உள்ளிட்ட அண்டை பகுதிகளிலும் உணரப்பட்டது. நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
சில வீடுகளின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த நிலநடுக்க தருணத்தை பதிவு செய்துள்ளன. அந்தக் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
நிலநடுக்கம் நிகழ்ந்த சமயம் தூங்கிக் கொண்டிருந்த பலர் பயத்தில் ஜன்னல்கள் வழியாகவும், பால்கனிகளிலிர...









