
பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் எடுத்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கு பஞ்சாபை அழைத்துச் சென்று உள்ளார். நேற்று இரவு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
அகமதாபாத்தில் மழை காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக போட்டி தொடங்கிய பிறகு, மும்பை அணி 20 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் 44 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 38 ரன்களும் எடுத்தனர்.
நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும், இதுவும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். புதிய ஐபிஎல் சாம்பியன் பட்டம் பெற போட்டியிடப் போகும் இந்த இரு அணிகளும் இதுவரை ஐபில் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.