Friday, June 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, இந்திய டீனேஜர் குகேஷ், கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

நார்வே சதுரங்கப் போட்டியின் சதுரங்க வரலாற்றில் இளைய உலக சாம்பியனான இந்தியாவின் 19 வயது குகேஷ் 62 நகர்வுகளுக்குப் பிறகு கார்ல்சனை வெற்றி பெற்றார். “ஐயோ கடவுளே!” என்று தோல்வியடைந்த மேக்னஸ் கார்ல்சன் மேஜையை தட்டி கூச்சலிட்டார்.

சதுரங்க விளையாட்டின் வழக்கத்திற்கு மாறாக இப்படி உணர்ச்சி வசப்பட்டதற்கு மேக்னஸ் கார்ல்சன் குகேஷிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டார், பின்னர், தனது ஸ்கோர் ஷீட்டில் கையொப்பமிட்டு, பலகையின் நடுவில் நிமிர்ந்த கருப்பு ராஜாவைத் தட்டிவிட்டு, வெளியேறும்போது, ​​அவர் இந்திய இளைஞன் குகேஸின் முதுகில் தட்டினார்.

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் உலக சாம்பியன் குகேஷ் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல, நார்வேவைச் சேர்ந்த 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் உள்பட மொத்தம் 6 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்று நடந்த போட்டியில் குகேஷ், நார்வேவின் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். வெள்ளை நிற காயுடன் ஆட்டத்தை தொடங்கிய குகேஷை விட கார்ல்சனே பெரும்பாலான சமயங்களில் ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் சாமர்த்தியமாக விளையாடிய குகேஷ் இறுதியில் வெற்றி பெற்று, கார்ல்சனுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதனால், ஏமாற்றம் அடைந்த கார்ல்சன் மேஜையை கையால் ஓங்கி அடித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.