“பாவேந்தர் பாரதிதாசன்” அவர்களின் 135-வது பிறந்த நாள்!
- இதழாசிரியர் பொன். வசந்தகுமாரன்
பாவேந்தர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ஆம் நாள் புதுச்சேரியில் கனகசபை முதலியார், இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் கனக சுப்புரத்தினம். சுப்புரத்தினம் இளமையிலேயே கவி இயற்றும் திறம் பெற்றுத் திகழ்ந்தார். பாவேந்தர், ஆசிரியர் திருப்புளிசாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார். புதுவை மகாவித்வான் ஆ.பெரியசாமிப் பிள்ளை அவர்களிடமும், பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
புதுவை மாநிலக் கல்லூரியில் உயர்நிலைக் கல்வி பயின்று பின்னர்த் தமிழ்ப் புலவர் வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றுப் புலவராகத் தேர்ச்சி பெற்றார்.
பாவேந்தர் சுப்பிரமணிய பாரதியாரைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார். பாரதியாரின் புலமையும், எளிமையும் கவிஞரைக் கவர்ந்தன. பாரதி மீது பற்று மிகக் கொண்டு தன் பெயரை ப...









