மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு: ரஷ்ய மூத்த ஜெனரல் கொல்லப்பட்டார்!
ரஷ்யாவின் முக்கிய ராணுவ தளபதி யாரச்லாவ் மாஸ்காலிக் (Yaroslav Moskalik) பயணித்த காரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அவரை கொன்றுள்ளது உக்ரைன். இந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் தளபதியின் உடன் இருந்த அவரது தனிப்பட்ட பாதுகாவலர் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் ரஷ்யாவின் ராணுவ தலைமை நிலையத்திற்கு முன்பாக நேர்ந்திருக்கிறது. கொல்லப்பட்ட யாரச்லாவ் மாஸ்காலிக், ரஷ்ய படைகளால் உக்ரைனின் கேஷ் நகரைக் கைப்பற்றும் முக்கியமான திட்டங்களை உருவாக்கியவர். இதனால் அவருடைய மரணம், ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உலக அரசியல் வட்டாரங்களில், இந்த தாக்குதல், வொலொடிமிர் செலன்ஸ்கியின் உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் செயல்திறனை பெரிதும் போற்றும் வகையில் பேசப்படுகின்றது.
தற்போது, மொஸ்கோவில் பாதுகாப்பு நிலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், உளவுத்துறை மற்றும் ராணுவம் அவசர...









