முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகியோரது வீடுகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சென்னை முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இதேபோன்று, சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் எமெயில்கள் வந்தன. அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவை அனைத்தும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது.
ஒரே நேரத்தில் ஸ்டாலின் மற்றும் விஜய் வீடுகளுக்கு மிரட்டல்
சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு**, நேற்று காலை 5.30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர், “முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன” என கூறியதும், அழைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, தகவல் தேனாம்பேட்டை மற்றும் நீலாங்கரை காவல் நி...









