70க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்த உக்ரைனின் ஆபரேஷன் “ஸ்பைடர்வெப்”.
ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் மீது உக்ரைனின் "ஸ்பைடர்வெப்" ட்ரோன் தாக்குதல் ஒசாமா பின்லேடனைக் கொல்ல அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஒப்பானது என்று அமெரிக்க செனட்டர் ரிச்சர்ட் புளூமெண்டல் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) உக்ரைன் ரஷ்ய எதிரி எல்லைக்குள் ஒரு ரகசியமான நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டதாக அறிவித்தது. 70க்கும் மேற்பட்ட ரஷ்ய விமானங்களை அழித்த உக்ரைனின் ஆபரேஷன் ஸ்பைடர்வெப் "சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய இராணுவ சாதனைகளில் ஒன்றாகும்" என்று அமெரிக்க செனட்டர் கூறியுள்ளார்.
"இந்தத் தாக்குதல்களின் திறமை மற்றும் துணிச்சலைப் பொறுத்தவரை, இது ஒசாமா பின்லேடன் மீதான அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் இஸ்ரேலிய பேஜர் நடவடிக்கையுடன் சமீபத்திய ஆண்டுகளில் மிகப்பெரிய இராணுவ சாதனைகளில் ஒன்றாக மதிப்பிடப்படும்," என்று புளூமெண்டல் கூறினார்.
117 ட்ரோன்கள் ரஷ...









