Monday, July 7பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

பாரதம்

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடலில் நெரிசலில் பெண் பலி, மகன் காயம்!

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரையிடலில் நெரிசலில் பெண் பலி, மகன் காயம்!

பாரதம்
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. புதன்கிழமை மாலை ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் முதல் காட்சியின் போது 35 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் அவரது ஒன்பது வயது மகன் பலத்த காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனைப் பார்க்க ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. திரையிடலுக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் வந்திருந்த நடிகரைக் காண ரசிகர்கள் குவிந்ததால் தியேட்டருக்கு வெளியே பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கூற்றுப்படி, கூட்டத்தின் அழுத்தத்தால் தியேட்டரின் பிரதான கேட் இடிந்து விழுந்தது. கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். ஒழுங்கை பராமரிக்க முயற்சி செய்த போதிலும், நெரிச...
பஞ்சாப்: முன்னாள் துணை முதல்வர் மீது கொலை முயற்சி முறியடிப்பு – என்ன நடந்தது?

பஞ்சாப்: முன்னாள் துணை முதல்வர் மீது கொலை முயற்சி முறியடிப்பு – என்ன நடந்தது?

பாரதம்
பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல், மத தண்டனையை நிறைவேற்றுவதற்காக பொற்கோவிலின் வாசலில் காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மத தண்டனை பின்னணி:2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தளம் அரசு எடுத்த முடிவுகளுக்கு எதிராக அகல் தக் சாஹிப் சீக்கிய மத குழு, சுக்பீர் சிங் பாதல் மற்றும் அவருடன் இருந்த சிலருக்கு மத தண்டனை விதித்தது. இதன்படி, சுக்பீர் சிங் இரண்டு நாட்கள் பொற்கோவிலின் வெளியில் பணியாளர்களின் உடை அணிந்து ஒரு மணிநேரம் காவலராக சேவை செய்ய வேண்டும் என்று உத்தரிக்கப்பட்டது. தண்டனையின் இரண்டாம் நாளில், அவர் சேவை செய்யும் போது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. இதில் பாதல் எந்த வித பாதிப்பும் இன்றி பிழைத்தார், மேலும் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. துப்பாக்கிச் ச...
எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

எச். ராஜாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு

பாரதம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் எச். ராஜா மீது 2018 ஆம் ஆண்டு மார்சில் பெரியார் சிலை உடைப்பேன் என்ற கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவு செய்ததற்கும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகள், கலவரம் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் எச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றம், வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க சி...
சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

பாரதம்
Infosys நிறுவனம், சட்டவிரோதமாக தனது ஊழியர்களுக்கு விசாக்கள் வழங்கிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், நிறுவனர் நாராயணமூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து வெளியிட்டதால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது இந்த விசா விவகாரம் வேகமெடுத்துள்ளது. அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக Infosys நிறுவனம் ரூ.238 கோடி அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது, அமெரிக்காவில் இந்திய நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாகும். Infosys, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 22 நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனத்தில் 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். விசா முறைகேடு விவரம்:அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், Infosys, ...