அமெரிக்காவில் மனைவி மற்றும் மகனைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர் யார்?
கடந்த வாரம் வாஷிங்டனின் நியூகேஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர் தனது மனைவி மற்றும் மகனுடன் இறந்து கிடந்தார். மைசூருவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஹோலோவேர்ல்டின் (HoloWorld) தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஹர்ஷவர்தன எஸ் கிக்கேரி (57) என அடையாளம் காணப்பட்டார்.
போலீசார் ஒரு ஜன்னலில் ரத்தம், தெருவில் ஒரு தோட்டா மற்றும் மூன்று உடல்களைக் கண்டெடுத்ததாக கிங் கவுண்டி ஷெரிப்பின் செய்தித் தொடர்பாளர் பிராண்டின் ஹல் சியாட்டில் தெரிவித்தார். குற்றத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஏப்ரல் 24 அன்று நடந்த சம்பவம் அதிகாரிகளால் கொலை-தற்கொலை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின்படி, கிக்கேரியின் மனைவியும் இணை நிறுவனருமான 44 வயதான ஸ்வேதா பன்யம் மற்றும் அவர்களின் 14 வயது மகனின் மரணங்கள் கொலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, ...









