உருகும் பனிப்பாறைகள், கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
மனித வாழ்க்கைமுறையின் மாற்றத்தால் புவியின் சராசரி வெப்பநிலை இந்நூற்றாண்டின் இறுதியில் 2.7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என புவியியல் ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது, உலக அளவில் பரவலாக உள்ள பனிப்பாறைகள் விரைவாக உருகி, கடல்நீர் மட்டம் அபாயகரமாக உயரக்கூடும் என்பதை காட்டுகிறது.
பத்து நாடுகளைச் சேர்ந்த 21 வல்லுநர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், எட்டு விதமான பனிப்பாறை மாதிரிகள் கொண்டு 2.75 லட்சம் பனிப்பாறைகளில் 2 லட்சம் பனிப்பாறைகளின் எதிர்காலம் கணிக்கப்பட்டது. இவர்களின் ஆய்வு முடிவுகள் “சயின்ஸ்” என்ற உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் பனிப்பாறைகள் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட மிகவும் வேகமாக உருகி வருகின்றன. இந்த வேகம் இப்படியே தொடருமானால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், பூமியின் சராசரி வெப்பநிலை மேலும் 2.7°C அதிகரித்து, உலகின் பனிப் பாறைகளில் 76 சதவிகிதம்...









