சத்தீஸ்கரில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட 30 பேர் சரண்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அரசின் மறுவாழ்வு திட்டத்தை ஏற்றுக்கொண்டு பெருமளவில் சரண் அடைந்து வருகின்றனர். பிஜாப்பூர் மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வில் 9 பெண் நக்சலைட்டுகள் உட்பட மொத்தம் 30 பேர் சரண் அடைந்து, தங்கள் கையிலிருந்த ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ச்சியாக அதிகரிக்கும் சரண்:அண்மைக்காலமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தீவிர நடவடிக்கைகளால் நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளன. துல்லியமான ரகசியத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் நடவடிக்கைகளால், பல்வேறு முகாம்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல நக்சலைட்டுகள் தங்கள் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசின் மறுவாழ்வு கொள்கையை நாடி சரண் அடையும் நிலை உருவாகியுள்ளது.
துணை முதல்வரின் விளக்கம்:இச்சம்பவம் குறித்து சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா...









