Friday, June 13பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு ‘முதல் அமைதியான இரவு’ – இந்திய ராணுவம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சனிக்கிழமை (மே 10) போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பட்டன. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் அதை மீறியது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்திய ராணுவம் ‘இரவு பெரும்பாலும் அமைதியாக இருந்தது’ என்று கூறியது.

பாகிஸ்தான் தரப்பில் இருந்து ட்ரோன்கள் இலக்குகளை இராணுவம் இடைமறித்ததால், எல்லை மாநிலங்களில் மின் தடை மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, “ஜம்மு & காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லையில் உள்ள பிற பகுதிகளில் இரவு பெரும்பாலும் அமைதியாக இருந்தது.

சமீபத்திய நாட்களில் எந்த சம்பவங்களும் நடக்காமல் முதல் அமைதியான இரவு இது, என்று ராணுவம் தெரிவித்துள்ளது.