விசாகப்பட்டினத்தில் வாயுக் கசிவால் 2 பேர் உயிரிழப்பு!

விசாகப்பட்டினத்தில் மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட வாயுக் கசிவால், 2 பேர் உயிரிழப்பு. 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மே மாதத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக்கசிவால் விசாகப்பட்டினத்தில் 2 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொழிற்சாலையில் இருந்து டாக்சிக் ஸ்டைரீன் வாயு கசிந்ததால் சுற்றியுள்ள 3 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மயக்கமடைந்தவர்களை மீட்டனர்.