ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் நடந்த தாக்குதலில் 3 பேர் பலி

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் தெரிவில் சொகுசு ஒட்டல் ஒன்று உள்ளது. அந்த ஒட்டலில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இன்று தங்கள் வழக்கமான வேலையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஓட்டலுக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்தினான்.இதனால், அந்த ஓட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது மர்ம நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான்.இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை சுட்டுக்கொன்றனர். ஆனாலும், மர்ம நபர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த பகுதி முழுவதும் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.