கர்னல் சந்தோஷ் பாபு சிலை

'ரியல் ஹீரோ' கர்னல் சந்தோஷ் பாபு நினைவாக சிலை: தெலங்கானா அரசு அசத்தல்!!

லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய - சீன ராணுவத்தினருக்கு இடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் நடைபெற்றது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இவர்களில், தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டையை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபுவும் ஒருவர்., அவரது உடல் சொந்த ஊரான சூர்யாபேட்டைக்கு அண்மைில் கொண்டுவரப்பட்டு, ராணுவ மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், அப்போது அரசின் நிவாரணத் தொகையில் ஒரு பகுதியாக 5 கோடி ரூபாய்க்ககான சோலையை வழங்கினார். மேலும் அவரது மனைவிக்கு சப் கலெக்டர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது பேசிய தெலங்கானா முதல்வர், "சந்தோஷ் பாபுவின் சொந்த ஊரான சூர்யாபேட்டையில் அரசு சார்பாக அவருக்கு உருவச் சிலை அமைக்கப்படும்" என தெரிவித்திருந்தார்.

அதன்படி, அவரது உருவச் சிலையை செய்யும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கர்னல் சந்தோஷ் பாபுவின் உருவச் சிலையை நிறுவ, சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.