சீனாவின் ராஜ தந்திரம் (செஸ் விளையாட்டு)!

பல நாடுகள் கடன் வாங்குவதற்கு உலக வங்கியிடமோ, அல்லது நிதி நிறுவனங்களிடமோ செல்லும் பொழுது பல தரப்பட்ட ஆவணங்களும், பல கேள்விகளுக்கும் ,பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அந்த நிலையில் சமாளிக்க முடியாத நாடுகளை பார்த்துக் சீனா தந்திரமாக கனிம வளங்கள் சுரண்டும் நோக்கத்துடனும் மற்றும் தனது சொந்த நலனுக்காகவும் இந்தியாவுக்கு செக் வைக்கும் நோக்கத்துடனும் உலக வல்லரஸ் என்ற கனவில் சீனா செய்து வரும் அத்துமீறிய செயல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது .

இந்த கடன் தேவைகளை கருதி பலநாடுகளுக்கு சீனா அந்த நாட்க்குள் நுழைகிறது அந்த நாட்க்கு கடனை கொடுத்து கனிம வளங்களையும், நாட்டின் நிர்வாகத்தில் ஆதிக்கத்தையும் செலுத்த எண்ணுகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உலக நிதிநிறுவனங்கள் கொடுத்த நிதியை விட இரு மடங்கு கொடுத்துள்ளது 76 ஆயிரம் கோடி செலவில் காயா துறைமுகம் அமைத்துக் கொடுத்து அந்த துறைமுகத்தை இணைக்கும் வகையில் சீன பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை 4லட்சம் கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் கட்ட 8ஆயிரம் கோடி சீனா கொடுத்து அதற்கான வட்டியை திரும்ப கொடுக்காத நிலையில் அந்த துறைமுகத்தை 99வருட குத்தகைக்கு எடுத்துக் கொண்டது.

கொக்வைலன்,அம்பாந்தோட்டை, குவாதர் ஆகிய மூன்று துறைமுகங்களையும் இணைத்தால் வருகின்ற எல்லைக்கோடு இந்தியாவை இந்து சமுத்திரத்திற்குள் முடக்கிவிடும். இந்தியாவின் முக்கியமான பொருளாதாரமும் இந்து சமுத்திரத்திலேயே தங்கியுள்ளது.இந்தியாவுக்கு இந்து சமுத்திரத்தின் போக்குவரத்து மிக அவசியம். எனவே சீனா இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இந்தியாவிற்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் இந்த போரினை நடத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.

இதற்கு இந்தியா தன்னை காப்பாற்றி கொள்வதற்காக கட்டாயமாக போராடியே ஆக வேண்டும்.இந்த போராட்டத்திற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவினையும் வழங்கும்.

இலங்கையின் கபட விளையாட்டை மொத்தத்தில் அழித்துவிடும்.மொத்தத்தில் இந்த உலகின் அழிவுகளை சீனா தான் முன்னெடுத்துச் செல்கிறது என்பதில் ஐயமில்லை.

அதேபோன்று நேபாளத்துக்கு சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு பல மில்லியன் டாலர்களை கடனாக கொடுத்துள்ளது.

மியான்மாரில் யடாக் துறைமுகம் அமைக்க 10கோடி கொடுத்துள்ளது. வங்கத்தின் சிற்றகோன் துறைமுகத்தோடு மற்ற வளர்ச்சி பணிகளுக்கும் சேர்த்து மற்ற நாடுகளை விட அதிக பணம் கொடுத்துள்ளது. மாலதீவுக்கு சீனா கொடுத்த தொகையை கொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. ஒரு போர் ஒன்று வந்தால் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் பாகிஸ்தான் காசா துறைமுகம் மியான்மரின் ஐக்யா துறைமுகம் எல்லாம் சீனா வின் இராணுவ தள மாகிவிடும்.

2013 Belt and road for international cooperation 70 நாடுகளில் தன் ஆதிக்கத்தை செலுத்த சீனா கையாண்டு வரும் சதி.

எந்தக் காலத்திலும் தடையில்லாத கச்சா எண்ணைபெற செய்யப்படும் பெரிய திட்டம். அதோடு பல நாடுகளின் கனிமவழங்களை குத்தகைக் கொள்ளை அடிக்க செயல்படும் சதித் திட்டம் ஆபிரிக்க நாடுகளுக்கு அதிகமாக பணங்களை கொடுத்து எல்லா கனிம வளங்களையும் தானே குத்தகைக்கு எடுத்திடும் திட்டம். Djibouti என்ற ஆபிரிக்க நாட்டிற்கு 9000 கோடி கடனைக் கொடுத்து பின்னர் அந்த நாட்டில் இராணுவத் தளம் அமைத்தது. விரைவில் இந்த பட்டியலில் எத்தியோப்பியாவும் சேரும். அடுத்த 10 வருடங்களில் வற்றிக் கார்கள் கூடுதலாக அமையும் அந்த நேரத்திற்கான வேலையில் இப்பொழுதே இறங்கிவிட்டது சீனா. கோவைட், லத்தியம் எனப்படும் மூலப்பொருள்களை தன்வசம் பதுக்கி உலகில் வற்றிக்கார்கள் தந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எண்ணுகிறது. இந்த சீனாவின் மாறுபட்ட கோணங்களை ஐநா கேட்பது கடிநமாக உள்ளது ஐ.நா வின்அதிகாரம் சீனா வின் கைகளில் உள்ளது ஜ.நா வின் 15 சிறப்பு சபைகள் உள்ளது அதில் தொழில் துறை மேம்பாட்டு அமைப்பு, உணவு மற்றும் மேலாண்மை அமைப்பு, பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம், பன்னாட்டு வான்பயண அமைப்பு என்ற 4 அமைப்புக்களின் தலைவர்கள் சீனர்கள் இந்த மொத்த அமைப்புகளில் சீனர்களின் ஆதிக்கம் அதிகம். மருத்துவர் அல்லாத எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்றோஸ்சை உலக சுகாதார அமைப்புக்கு தலைவராக்கியது சீனா அதற்கான பிரச்சாரம் முதல் பலநாடுகளை பணியவைத்து வாக்களிக்க செய்தது சீனா. அதன் காரணமாகவே உலக நாடுகழுக்கு கொரோணா வைரஸ்சின் பரவலை மூடிமறைத்தார் உலக சுகாதார அமைப்பின் தலைவர்.

சீனாவுக்கு ஜ.நாவின் முடிவுகளை திரும்பிப் பெறும் நிட்டோ அதிகாரம் உள்ளது எனவே சீனாவுக்கு சாதகம் இல்லாத முடிவுகள் வரும்போது தடுக்கும் சக்தி அந்த நாட்க்கு உள்ளது. கேள்வி கேட்டக்கும் அதிகாரத்தையும் அந்த நாடு வைத்துள்ளது. சர்வதேசே நீதி மன்றத்தின் துணைத் தலைவர் யார்?

அதேபோல் உலகமுழுவதிலும் சீன விஞ்ஞானிகள் உளவாளிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், உலகம் முழுவதும், பசி எனும் பெருந்தொற்று பரவும் நிலை உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. கோடிக்கணக்காணவர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால், உலகம் முழுவதும் உணவுத் தேவை காரணமாக அல்லல்படும் மக்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டும் வரும் காலங்களிலும் அதிகரித்தே வரும். கொரோனா வைரஸ்கள் உருமாறி,உருமாறி வந்தது கொண்டேதான் இருக்கப்போகிறது அதற்கு ஏற்றவாறு மனிதன் கவனமாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.