உலக சுற்றுச்சூழல் தினம்! - ஜூன் 5


1974 ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் கொண்டாப்படுகிறது.

மரம் நடுவது நன்மை தரும்;

பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் .

அதேபோல மரம் நடுவதற்கு முன் நாம் இருக்கும் காடுகளை அழிக்காமல் காப்பதும் முக்கியமான ஒன்று. பூமியில் வாழ்வதற்கு காடுகள் மிக அவசியம்.

உலகில் உள்ள நான்கில் மூன்று பங்கு மரங்கள், உயிரினங்களுக்குக் காடுகள்தான் இருப்பிடம். கரியமில வாயுவை உள்வாங்கி, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து எல்லாம் அளித்து வருவது காடுகள்தான் காடுகளை காப்பாற்றுவது மனிதனின் கடமை கடமையில் இருந்தது தவறும்போது நம்மை நாமே அழித்து விடுகிறோம் அதோடு வருங்கால சமுதாயத்தையும் எங்கள் சுகத்துக்காக அழித்து விடுகிறோம் இதுதான் நிதர்சனமான உண்மை.

இந்த பேரண்டத்தில் வாழும் ஒவ்வோர் உயிரினத்தின் மீதும் தாக்கம் இந்த பருவ நிலை மாற்றம்.

அதாவது கடல் நீர் மட்டம் உயர்வதற்கு வெப்பத்தால் நீர் விரிவடைவதும் ஒரு காரணம்.

கடந்த பல ஆண்டுகளாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான வெப்பத்தை கடல் நீர் உள்ளிழுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடல் மட்டம் உயர்கிறது.

இப்போது கடல் மட்டம் உயர்வதற்கு கிரீன்லேண்ட் மற்றும் அண்டார்ட்டிக்கா பனிப்பாறைகள் உருகுவதுதான் முக்கிய காரணம் என்கிறது பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையிலான குழு.

2007 - 2016 இடையேயான காலகட்டத்தில் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகுவது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில் கிரீன்லேண்டில் பனிப்பாறைகள் உருகுவது இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்றத்தின் காரணமாக வடக்கு ஆசியா மற்றும் மத்திய ஐரோப்பாவில் உள்ள பனிப்பாறைகள் 2100ஆம் ஆண்டுக்குள் 80 சதவீதம் வரை உருகிவிடும்.

அதாவது 2100ஆம் ஆண்டுக்குள் கடல்மட்டம் 1.1 மீட்டர் வரை உயரும் என ஒரு ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.

இது தாழ்வான பகுதியில் வசிக்கும் 70 கோடி மக்களின் வாழ்வை கேள்விக்குறியாக்குமென இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

2030ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 45 சதவீதம் குறைத்தால் இந்த பேரழிவிலிருந்து நாம் தப்பலாம்.

இதற்காக அரசுக்கு, அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் தர வேண்டும்.

சாமானியர்கள் மற்றும் நுகர்வோர்கள்தான் உலகம் வெப்பமயமாவதை தடுப்பதில் முக்கிய பங்குவகிக்கப் போகிறார்கள்

வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

நகரங்களில் நம் போக்குவரத்தை நாம் முடிவு செய்ய முடியும். நமக்கு பொது போக்குவரத்து இல்லாதபட்சத்தில், பொது போக்குவரத்தை உறுதி செய்யும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுங்கள்.

அதுபோல, மின்சார வாகனங்களை தேர்ந்தெடுங்கள். விமான போக்குவரத்தை விட, தொடர்வண்டி போக்குவரத்தே சால சிறந்தது.

இயன்றால் உங்களது வணிக பயணத்தை ரத்து செய்துவிட்டு, காணொளி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்துங்கள்.

இரண்டாவது மிக முக்கியமான விஷயம் ஆற்றலை சேமிப்பது. அதாவது இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள்.

இது உங்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விஷயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும். அடுத்த முறை மின்சாதன பொருட்களை வாங்க செல்லும் போது, மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி நிறைவாக வேலை செய்யும் மின்சாதன பொருளா என்று பாருங்கள். அதனை நிச்சயம் அந்த பொருட்களின் அட்டையில் குறிப்பிட்டு இருப்பார்கள்.

மற்றொரு யோசனையும் இருக்கிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy)-க்கு மாறுங்கள். தண்ணீர் சூடேற்றும் சாதனம் முதல் உங்கள் மொபைல் சார்ஜர் வரை சூர்ய ஆற்றலை பயன்படுத்திக் கொள்ளலாம்

அதீத விவசாய உற்பத்தியும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

கறிகோழிகள் வளர்ப்பது, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும். புவியை வெப்பமாக்கும்.

பாரிஸ் பருவநிலை மாற்ற சந்திப்பில், 119 நாடுகள் விவசாயத்தினால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுவை குறைப்பதாக உறுதி அளித்தன. அந்த நாடுகள் எவ்வாறு அதனை செய்யும் என்று நமக்கு தெரியாது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயம் முடியும்.

நம் உணவு பழக்கத்தை கொஞ்சம் மாற்ற வேண்டும். மாமிசம் உண்பதை குறைத்து, அதற்கு ஈடாக காய்கறி, பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பகுதியில் எது விளைகிறதோ, அதனை உண்ணுங்கள்.நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள என்ன வழிகள் உள்ளதோ அதோடு நம் சமூகத்தையும் சேர்த்து பாதுகாப்போம்.

" நீடித்த கட்டிடங்கள்
நிலம் மறையும் நிலையங்கள்,
வாடிடச் செய்திடும்- வளர்ந்திடும் பசுமையை!
தாவரம் இன்றியே, தள்ளாடும் உயிர் எல்லாம்!
ஊரில் நிரம்பிய வான்மழை சேரும் சகதியும் ஆகிவிடாமல், நிலத்தடிக்கு சேர்ந்திட்டு விட்டால், நிச்சயம் இயற்கை எழில்வளம் சேர்க்கும்!
கிணறு நிறையும்!
குளாயில் நீர் வரும்!
நிலநடுக்கமும் நேர்ந்திடாதுலகிலே!
பாலைவனங்கள் சோலைகளாகும்!
பஞ்சம் தீரும், பசிப் பிணி நீங்கும்!
கொஞ்சம் முயற்சியால் கோடி நன்மைகள்!
புதிய குடியேற்றத் திட்டங்களால் நிறைய செடியேற்றம் செழிக்கட்டும்."

- பொன்.வசந்தகுமாரன்