பார்வையாளர்கள் இல்லாமல் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி



கொரோனா பாதிப்பினால் முதல் முதலாக பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தை, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. 143 வருட உலக கிரிக்கெட் வரலாற்றில், ஸ்டேடியத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் கிரிக்கெட் விளையாடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 204 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜேசன் ஹோல்டர் அதிக பட்சமாக 6 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 318 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தது. தன் இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து 313 ரன்கள் எடுத்தது.

200 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் ஆட்டத்தை தொடங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதிக பட்சமாக ஜெர்மைன் ப்ளாக்வூட் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சீராக ரன்களை எடுத்து ஆறு விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது வெஸ்ட் இண்டீஸ். நான்கு விக்கெட்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்.