இந்திய தொழிலாளர்களின் தந்தையும் இந்திய ‘மே’ தினத் தந்தையும்

ஆசியாவிலேயே முதன்முதலில் மே தினம் இந்தியாவில்தான் கொண்டாடப்பட்டது அதுவும் சென்னையில். 1923ஆம் ஆண்டில் மாமேதை சிங்காரவேலர் அவர்கள் மே தினத்தை கொண்டாடினார். அந்த மே தினத்து அன்றுதான் தொழிலாளர் விவசாயக் கட்சி என்ற ஒரு கட்சி அமைக்கப் பட்டுள்ளதை அறிவித்தார். ஏற்கனவே அவரும் தோழர் லெனினுக்கும் இடையே கடிதத் தொடர்புகள் நிகழ்ந்திருந்தன. தோழர் லெனின் அவர்கள்தான் தொழிலாளி விவசாயி கட்சி என்ற பேரைக் தெரிவு செய்து அவருக்கு அறிவித்திருந்தார்.

தொழிலாளர்கள் தங்களுக்கென அமையும் ஒரு கட்சியால்தான் தங்களுக்கு தேவையான உரிமைகளை பெறமுடியும் என்ற நோக்கோடு ஒரு அரசியல் கட்சி தேவை என்று எண்ணினார். தொழிலாளர் கட்சியால் தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையும் ஊக்கமும் பல்கி பெருகும். தொழிலாளர்களுக்கென்று ஒரு கட்சி இல்லாததால் தொழிலாளர்கள் பல அரசியல் கட்சிகளுக்கு இரையாகின்றனர். அப்படியும் தங்களுக்கென்று உரிமையை கூட பெற இயலாமல் தவிர்க்கின்றனர். ஆகையால் இனி அரசாங்கத்தின் தயவை எதிர்பாராமலும் மற்ற கட்சியுடன் ஒற்றுமை குலையாமலும் இருக்க வேண்டுமானால் தங்களுக்கென்றொரு கட்சியை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். சட்டசபைக்கும் செல்ல வேண்டும். இவை போன்ற கருத்துக்களை கொண்டு இக்கட்சி உருவாக்கப்பட்டது.

தொழிலாளர் விவசாயக்கட்சி உருவான பின்னர் கட்சி வேலை யின்மை பிரச்சினையை முதலில் எடுத்துக் கொண்டது அதன்பிறகு கொடிநாள் அன்று போரொளிப்பு நாள் என்றும் கொண்டாடி கட்சி சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியது. 1923ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மாமேதை சிங்காரவேலர் அவர்கள் தொழிலாளர் விவசாயிகள் கெஜட் எனும் இதழை தொடங்கினார். அவரை ஆசிரியராகக் கொண்டிருந்த இந்த கெஜட் திங்கள் இரு முறை வெளிவந்தது. இந்த இதழ் இந்திய நாட்டின் தொழிலாளர் விவசாயிகள் கட்சிகள் கொள்கையை பரப்பும் ஒரு கருவியாக அவருக்கு பயன்பட்டது.

தொழிலாளன் என்ற தமிழ் வார இதழும் புது உலகம் எனும் மாத இதழையும் நிறுவினார். செங்கல்பட்டில் சிங்காரவேலர் பெண்கள் மாநாட்டை கூட்டினார். அதில் கலந்து கொண்ட பாரதிதாசன்... இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நான் சிங்காரவேலரின் தொண்டன் என நன்றியுடன் மாநாட்டு கையேட்டில் குறிப்பு எழுதியுள்ளார்.