டிரம்ப் பதவியேற்பு உரையின் 5 முக்கிய அம்சங்கள்: இந்தியாவை பாதிக்கும் அறிவிப்புகள்!
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். தனது ஆட்சியின் கீழ் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து தனது உறுதியான நோக்கங்களை உரையில் தெரிவித்துள்ளார். இதில் உள்ள 5 முக்கிய அம்சங்களும் இந்தியாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் பாதிக்கும் வகையில் உள்ளன.
1. அமெரிக்கா-மெக்சிகோ எல்லை:
டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், "மெக்சிகோவிலேயே இருங்கள்" கொள்கை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
2. பனாமா கால்வாய்:
பனாமா கால்வாயை சீனாவிடம் இருந்து மீண்டும் அமெரிக்க கட்டுப்பாட்டில் கொண்டு ...









