
15 மாதமாக நீடித்த இஸ்ரேல் ஹமாஸ் போர்.. திடீரென முடிவுக்கு வந்தது எப்படி! 8 மேஜர் பாயிண்டுகள்
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களாகப் போர் தொடர்ந்து வந்த சூழலில், இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய போர் முடிவே இல்லாமல் தொடர்ந்து வந்தது. இதை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டன. இருப்பினும், பல காரணங்களால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் ஒருவழியாகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
3 கட்டங்களாகப் போர் நிறுத்தம்:
எகிப்து, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ததில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் முதலாம் கட்டத்தில் தாக்குதல் முழுமையாக நிறுத்தப்படும்.. காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும். அமெரிக்கர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். பாலஸ்தீனிய மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். காசாவில் தேவையான மனிதாபிமான உதவிகளும் அனுமதிக்கப்படும். இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டம் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும். மீதமுள்ள பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்கும். காசாவில் இருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேற்றப்படுவார்கள். தற்காலிக போர் நிறுத்தம் நிரந்தரமாக மாறுவது இந்த இரண்டாம் கட்டத்தில் தான். மூன்றாம் கட்ட போர் நிறுத்தம் என்பது காசிவின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்புடையது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக காசாவில் ஒரு மேஜர் புனரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும். மேலும், உயிரிழந்த பணயக்கைதிகளின் எச்சங்கள் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படும்.
கத்தார்:
காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அறிவிப்பு என்பது காசா பகுதியில் நிலவி வந்த ஆக்கிரமிப்பு, அழிவு மற்றும் கொலைகளை முடிவுக்குக் கொண்டு வரவும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் உதவும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வருவதில் கத்தார் முக்கிய பங்காற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பைடன்- டிரம்ப்:
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து பைடன் கூறுகையில், “இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடைவது அவ்வளவு ஈஸியாக இல்லை. நான் பல ஆண்டுகளாக வெளியுறவு விவகாரத்தைக் கவனித்து வருகிறேன். நான் பார்த்ததிலேயே மிகவும் கடினமான பேச்சுவார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். அமெரிக்காவின் சப்போர்ட் உடன் ஹமாஸ் மீது இஸ்ரேல் கடுமையான அழுத்தம் கொடுத்தது. அதுவே இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தைச் சாத்தியமாக்கியுள்ளது” என்று கூறியுள்ளார். டிரம்ப் அடுத்த வாரம் அதிபராக பதவியேற்கும் சூழலில், இப்போது போர் நிறுத்த டீல் இறுதியாகியுள்ளது. முன்னதாக தான் பதவியேற்கும் முன்பு போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை என்றால் அங்கு நரகமே வெடிக்கும் என எச்சரித்திருந்த இருந்த சூழலில் இப்போது போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக பைடன் மேலும் கூறுகையில், “கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் நான் பெற்றி பெற்றதாலேயே இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது” என்றார். அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லரும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பின் குழுவின் பங்கு முக்கியமானதாக இருந்ததாகப் பாராட்டியுள்ளார்.
தொடர்ந்த தாக்குதல்:
இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்றைய தினமே இறுதியானாலும் கூட, இது ஜனவரி 19ம் தேதி தான் அமலுக்கு வருகிறது. இதனால் தாக்குதல்கள் அங்கு முழுமையாக நிறுத்தப்படவில்லை. போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகக் காசா தரப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 8 முக்கிய அம்சங்கள்
- நிறுத்த உத்தரவு மற்றும் சமரசம்:
ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தினால், இரு தரப்பும் சமரச பேச்சுவார்த்தைகளுக்கு உடன்பட்டன. - அவசர மனிதாபிமான உதவி:
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், பிலஸ்தீன மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. - தாக்குதல்கள் நிறுத்தம்:
இரு தரப்பும் ஏரியல் மற்றும் நில தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுத்தன, இடையே அமைதி நிலவக் காரணமானது. - கிடையீடு செய்யப்பட்ட கைதிகள்:
இரு தரப்பிலும் கைதிகளாக இருந்தவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள், விடுவிக்கப்படுவார்கள் என உறுதி செய்யப்பட்டது. - கெடுபிடிகள் மற்றும் சர்வதேச ஈடுபாடு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புகள் நிலைமைகளை கண்காணிக்க உட்பட்டன. - கடுமையான பொருளாதார பாதிப்புகள்:
காசா மற்றும் இஸ்ரேலின் பல பகுதிகளில் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சரிசெய்யும் முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. - அமைதிக்கான நீண்டகால பேச்சுவார்த்தை:
இதற்குப் பிறகும் நிலையான அமைதிக்கான நிலைமைகளை உருவாக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. - சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள்:
காசா பகுதியில் மனிதாபிமான சலுகைகள் மேம்படுத்துவதற்கான திட்டங்களை அமல்படுத்தும் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டன.
இந்த நடவடிக்கைகள், வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கும், பாதுகாப்பான மற்றும் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.