Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

திபெத்தில் தொடரும் துயரம்: ஒரே இரவில் 6 முறை நிலநடுக்கம் – மக்கள் அவதி!

திபெத்தில் கடந்த இரவில் ஏற்பட்ட தொடர்ச்சியான 6 நிலநடுக்கங்கள் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளன. இந்த நிலநடுக்கங்களில் அதிகபட்சமாக ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.

கடந்த இரவு 12 மணிமுதல் காலை 5 மணிவரையிலான இந்த நிலநடுக்கங்கள், மக்களின் அச்சத்தையும் அவதியையும் அதிகரித்துள்ளன. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சிறு நில அதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல சீன அதிபர் உத்தரவிட்டார்.

மேலும், மீட்பு நடவடிக்கைகளுக்காக 1,500 பேரை நில அதிர்வு பகுதிகளில் அனுப்பி உதவிகள் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததின்படி, தொடர்ந்து நிகழும் இந்த நிலநடுக்கங்கள் திபெத்தின் மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது.