நேபாள் போராட்டத்தின் போது சிறையில் இருந்து தப்பிய நேபாள முன்னாள் பிரதமர்.
காத்மாண்டுவில் நடந்த மிகப்பெரிய Gen Z போராட்டத்தின் போது சிறையில் இருந்து தப்பிய நேபாளத்தின் முன்னாள் பிரதமர் ரபி லாமிச்சேன், தான் மீண்டும் சிறைக்கு செல்வதாக கூறியுள்ளார். சமூக ஊடக தளமான பேஸ்புக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்ட லாமிச்சேன், தனக்கு "பிறந்தநாள் பரிசாக" திரும்பவும் சிறைக்கு செல்வதாக கூறினார்.
அவர் ராஷ்ட்ரிய சுதந்திரக் கட்சியின் தலைவராகஇருந்தவர், மேலும் கூட்டுறவு மோசடியில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டில் அக்டோபர் 2024 இல் கைது செய்யப்பட்டார். புதிய அரசாங்கம் முந்தையதை விட தன்னை சிறப்பாக நடத்தும் என்று நம்புவதாக அவர் தனது பதிவில் கூறினார்.
லாமிச்சேன் உடன், 1,200 கைதிகள் அந்த சிறையிலிருந்து தப்பினர், மேலும் 13,000 க்கும் மேற்பட்ட கைதிகள் போராட்டத்திற்கு மத்தியில் நாடு தழுவிய அளவில் தப்பி ஓடிவிட்டனர். அவர் எழுதினார், "முந்தைய அரசாங்கம் தீவிர அரசியல் பழிவாங்கல் மூலம் எ...









