கீழடி: பண்டைய தமிழர்களின் மரபியல் வேர்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன!
தமிழ்நாட்டின் கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மனித டிஎன்ஏ (DNA) பகுப்பாய்வு, அங்கு வாழ்ந்த மக்கள் தென்னிந்திய, இலங்கைத் தமிழர் மற்றும் தெற்காசிய வம்சாவளியினருடன் நெருங்கிய மரபியல் தொடர்பைக் கொண்டிருந்ததை வெளிப்படுத்துகிறது.
முக்கியமான தொல்லியல் தளங்களிலிருந்து மீட்கப்பட்ட, மிகவும் சிதைந்த மற்றும் மாசுபட்ட டிஎன்ஏ மாதிரிகளிலிருந்து 75,000-க்கும் மேற்பட்ட மரபணு குறிகாட்டிகளை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையில் உள்ள 'பண்டைய டிஎன்ஏ ஆய்வகம்' வெற்றிகரமாகப் பகுப்பாய்வு செய்ததன் மூலம் இந்த ஆரம்பக்கட்ட முடிவு எட்டப்பட்டது.
தமிழ்நாட்டின் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக நவம்பர் 2022-ல் நிறுவப்பட்ட இந்த ஆய்வகத்தின் விரிவான ஆய்வு முடிவுகள், 2026-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புகழ்பெற்ற, சக ஆய்வாளர்களால் மதிப்பாய்வ...









