சென்னையில் நாய், மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி – மாநகராட்சி தீர்மானம்!
சென்னையில் செல்லப்பிராணிகளின் வளர்ப்பை முறைப்படுத்தும் நோக்கில், நாய் மற்றும் மாடுகளுக்கு மைக்ரோசிப் பொருத்த அனுமதி வழங்கியமை தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகராட்சி கூட்டத்தில் முக்கிய முடிவுகள்ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மொத்தம் 112 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் முக்கியமான ஒன்றாக, சென்னையில் செல்லப்பிராணிகளின் கண்காணிப்பை துல்லியமாக செய்ய, புதிய மென்பொருள் உருவாக்கம் மற்றும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்துதல் உள்ளிட்டவை ஒப்புதல் பெற்றன. இதன் மூலம், மாநகராட்சியால் நிர்மாணிக்கப்படும் நவீன மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்படும் மாடுகளுக்கும் மைக்ரோசிப் பொருத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மைக்ரோசிப் மூலம் கிடைக்கும் தகவல்கள்மைக்ரோசிப் பொருத்தப்படும் விலங்குகளுக்கு,✅ பெயர்✅ இனம்✅ ...









