பரந்தூர் விமான நிலைய திட்டம்: நிலம் வழங்குவோருக்கு 5 மடங்கு அதிக இழப்பீடு – தமிழக அரசு புதிய முடிவு!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைவுள்ள புதிய விமான நிலைய திட்டத்திற்காக நிலம் வழங்குவோருக்கு, சந்தை மதிப்பை விட ஐந்து மடங்கு அதிகமான இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இழப்பீட்டு தொகை நிர்ணயப் பணிகள் தொடங்கியுள்ளன, மேலும் வரும் மார்ச் மாதம் முதல் இழப்பீடு வழங்கப்படும்.சென்னை விமான நிலையத்திற்கு மாற்றாக பரந்தூர் திட்டம்
சென்னை விமான நிலையம், டெல்லி மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களுடன் ஒப்பிடும்போது, பரப்பளவில் சிறியதாக காணப்படுகிறது. இருப்பினும், வருடத்துக்கு 2 கோடி பயணிகள் பயன்படுத்தும் நிலையில், இந்த எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கலாம். இருப்பிடம் குறைவதால் விரிவாக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில், சென்னை மாறுபட்ட இடத்தில் புதிய விமான நிலையம் அமைப்பது திட்டமிடப்பட்டது.
இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், பொது-தனியார் கூட்டு முதலீட்டில்...









