Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று கவர்னர் ஆய்வு செய்கிறார்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (டிசம்பர் 28) கவர்னர் ஆர்.என். ரவி ஆய்வு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 23-ம் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர் ரவி, இன்று மதியம் 12:30 மணிக்கு அங்கு ஆய்வு செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.