ரயில்வே சேவைகளுக்கான ஒரே செயலி: ‘ரயில் ஒன்’ அறிமுகம்!
இந்திய ரயில்வே துறை சார்பில், ரயில்வேயுடன் தொடர்புடைய அனைத்து முக்கிய சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில், 'ரயில் ஒன்' (Rail One)' என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பல்வேறு செயலிகளை தனித்தனியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நீங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை ரயிலில் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய, முன்பதிவு இல்லா பயண சீட்டுகள் எடுக்க, நடைமேடை சீட்டுகள் பெற மற்றும் உணவு புக்கிங் செய்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி. (IRCTC), யு.டி.எஸ். (UTS) போன்ற தனித்தனி செயலிகளை பயணிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரே செயலியாக 'ரயில் ஒன்' உருவாக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய செயலியின் வெளியீட்டு விழா, நேற்று டில்லியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொ...








