சட்டவிரோத விசா முறைகேடு: Infosys-க்கு ரூ.238 கோடி அபராதம்! அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
Infosys நிறுவனம், சட்டவிரோதமாக தனது ஊழியர்களுக்கு விசாக்கள் வழங்கிய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், நிறுவனர் நாராயணமூர்த்தி ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்து வெளியிட்டதால் கடும் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது இந்த விசா விவகாரம் வேகமெடுத்துள்ளது.
அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக Infosys நிறுவனம் ரூ.238 கோடி அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது, அமெரிக்காவில் இந்திய நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்றாகும். Infosys, பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். 22 நாடுகளில் கிளைகள் கொண்ட இந்நிறுவனத்தில் 1.4 லட்சம் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
விசா முறைகேடு விவரம்:அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக H-1B தொழில்விசா பெற வேண்டிய இடத்தில், Infosys, ...
