பீஹாரில் வாக்காளர் திருத்தப் பணியில் ஆதார் அட்டை ஏற்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
பீஹார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு–பா.ஜ. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீஹாரில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஜூன் மாத இறுதியில், தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியைத் தொடங்கியது.
இந்தச் செயல்பாட்டின் போது, வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், பல்வேறு முறைகேடுகளை கண்டறிந்தனர். ஒரே நபர் பல இடங்களில் பெயர் பதிவு செய்திருப்பது, உயிரிழந்தவர்கள் கூட பட்டியலில் இடம்பெற்றிருப்பது போன்ற குற்றச்செயல்கள் வெளிச்சம் பார்த்தன. மொத்தம் 65 ...









