வந்தே மாதரம் 150வது ஆண்டு: பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாடலை பாடினார் பிரதமர் மோடி!
புதுடில்லி: இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, லோக்சபாவில் நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றினார். இந்த உரையின்போது, அவர் தமிழ் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீர்’ பாடலை மேடையில் உணர்ச்சி பொங்க பாடியதால், பார்லிமென்ட் அரங்கமே கைதட்டலால் முழங்கியது.
வந்தே மாதரம் குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:“வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா விவாதத்தில் பங்கேற்பது ஒரு வரலாற்றுச் சிறப்பான தருணம். இது வெறும் ஒரு பாடல் அல்ல – நாட்டின் சுதந்திர தாய்க்கான பாடல். சுதந்திரப் போராட்ட வீரர்களை ஊக்குவித்த முழக்கம். வந்தே மாதரம் என்பதில் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி என்னும் நிலைப்பாடுகள் இல்லை. இந்த முழக்கத்தால் தான் இன்று நாமெல்லாம் சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம்.”
ப...









