உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் திரும்பவேண்டும்: ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உக்ரைனிலிருந்து ரஷ்யா தனது படைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் 2014 ஆம் ஆண்டு தொடங்கி நீடித்து வருகிறது. 2022 பிப்ரவரி 24ஆம் தேதி, ரஷ்யா உக்ரைன் மீது வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை தொடங்கியது. மூன்றாண்டுகளாக இந்த போர் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த நாளோடு மூன்றாவது ஆண்டு நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, உலகத் தலைவர்கள் பலர் உக்ரைன் தலைநகர் கீவ்வில் திரண்டனர்.
இந்த போருக்கு முடிவுகட்ட, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பதிலாக, ஐரோப்பிய ஒன்றியம் தனது அணுகுமுறையை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸல்சில் மார்ச் 6ஆம் தேதி அவசர மாநாடு நடைபெறவுள்ளது. இதில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 2...









