5 கி.மீ தூரம் வரை வான்வழி இலக்குகளைத் தாக்கும் இந்தியாவின் லேசர் ஆயுதம்!
30 கிலோவாட் லேசர் அடிப்படையிலான அமைப்பை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதன் மூலம், நேரடி எரிசக்தி ஆயுதங்களை உருவாக்கும் நாடுகளின் உயர்மட்டக் குழுவில் இந்தியா நுழைந்துள்ளது. DRDOவின் கீழ் உயர் எரிசக்தி அமைப்புகள் மற்றும் அறிவியல் மையத்தால் (CHESS) உருவாக்கப்பட்ட இந்த ஆயுதம், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வான்வழி இலக்குகளைத் தாக்கும். இந்த உயர் சக்தி கொண்ட லேசர் அமைப்பு இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களில் ஒரு பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது.
இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா மட்டுமே இந்த தொழில்நுட்பத்தைப் இது வரை உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Mk-II(A) DEW அமைப்பு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. அறிக்கைகளின்படி, ஹைதராபாத்தில் உள்ள DRDOவின் உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம் (...









