கனடாவில் லிபரல் கட்சி வெற்றி – ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மை ஆட்சி கிடைக்குமா?
கனடா நாடாளுமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, மேலும் ஆளும் லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெறுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கனடாவில், கலைக்கப்பட்ட பார்லிமென்டில் 338 இடங்கள் இருந்தன. அவற்றில் ஆளும் கட்சியான லிப்ரல் கட்சி 153 இடங்களை வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையில் 120 உறுப்பினர்கள் இருந்தனர். கியூபக் கூட்டணி 33 இடங்களும், என்.டி.பி., கட்சி 24 இடங்களும், பசுமைக் கட்சி இரண்டு இடங்களும் வைத்திருந்தனர். சுயேச்சைகளாக மூன்று எம்பிக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அறிவிக்கப்பட்ட 177 இடங்களில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி 87 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கியூபக் கூட்டணி 14 இடங்களிலும், என்.டி.பி., கட்சி ஒரு இடத்தில...









