பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் (PoJK) உள்ள பகுதிகளை விடுவிக்க பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் (PoJK) நடைபெறும் இரத்தக் களரியை நிறுத்தவும், தனது மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் கட்டமைப்புகளுக்கு எதிராக நம்பகமான, சரிபார்க்கக்கூடிய மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை எடுக்கவும், சட்டவிரோத மற்றும் வலுக்கட்டாய ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து இந்தியப் பகுதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் பாகிஸ்தானுக்கு இந்தியா இன்று அறிவுறுத்தியது.
'யோம்-இ-இஸ்திஹ்சால்' (Youm-e-Istehsal) என்று அழைக்கப்படும் நிகழ்வு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துகள் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இத்தகைய திட்டமிடப்பட்ட நாடகங்களால் உலகம் ஏமாறாது என்று கூறினார். 'யோம்-இ-இஸ்திஹ்சால்' என்று அழைக்கப்படுவதைக் கடைப்பிடிக்க பாகிஸ்தான் மேற்கொள்ளும் முயற்சிகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்...









