Saturday, September 12பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

11 மாவோயிஸ்டுகள் சி.ஆர்.பி.எஃப். படையினரிடம் சரணடைந்தனர்.

ஒரு முக்கிய முன்னேற்றமாக, மகாராஷ்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் 11 மூத்த மாவோயிஸ்டுகள் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) முன்னிலையில் சரணடைந்தனர். இக்குழுவில், கோட்டக் குழு உறுப்பினர்கள், பகுதிக்குழுச் செயலாளர்கள், தளபதிகள் மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்த மாவோயிஸ்டுகள் அடங்கியுள்ளனர்.

சரணடைந்த இந்த மாவோயிஸ்டுகளின் தலைக்கு, ஒட்டுமொத்தமாக 68 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.